சினிமாவில் அட்ஜெஸ்மெண்ட்டுக்காக பலரும் தன்னை அனுகியதாவும், அவர்களை சமாளித்த விதம் பற்றியும் நடிகை அனு இம்மானுவேல் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமாக்களில் முக்கிய ஹீரோயினாக இருந்து வருபவர் அனு இம்மானுவேல். இவர் தமிழில் விஷாலுடன் இணைந்து துப்பாறிவாளன் படத்தில் நடித்தார்.
இதன் பின்னர் சிவகார்த்திகேயன் ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார். காந்த கண்ணழகி பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் இவர் பிரபலமானார்.
தமிழில் சூப்பர் ஹிட்டான பியார் பிரேமா காதல் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஊர்வசிவோ ராக்ஷசிவோ படத்தில் நடிப்பு ப்ளஸ் கவர்ச்சி என கலக்கியிருந்தார்.
இதைத்தொடர்ந்து ரவிதேஜாவுடன் இணைந்து ராவணசூரா என்ற படத்தில் துணிச்சலான படுக்கையறை காட்சிகளிலும் நடித்திருந்தார்.
தற்போது அளித்துள்ள போட்டியொன்றில், சினிமாவுக்கு வந்த புதிதில் தன்னை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி அணுகியவர்களை சமாளித்தது பற்றியும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை அனு இம்மானுவால் கூறியதாவது:
நான் சினிமாவுக்கு வந்த புதிதில் பல பேர் என்னிடம் தவறாக அணுகினார்கள். சிலர் ஓபனாகவே அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசினார்கள்
ஆனால் இதை கண்டு அஞ்சாமல் குடும்பத்தினரின் துணையுடன் சமாளித்தேன். இதுபோன்ற நேரத்தில் தனியாக பிரச்னையை எதிர்கொள்வதை காட்டிலும் குடும்பத்தின் துணையுடன் சமாளிப்பது நல்லது.
குடும்பத்தில் உள்ளவர்களால் மட்டுமே நமக்கு உதவ முடியும். பெண்கள் முன்னேற கூடாது என நினைக்கும் சில வக்கிர புத்தி உள்ளவர்களை பார்த்து பெண்கள் பயப்படாமல், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக துணிச்சலுடன் முன்னேற வேண்டும் என்றாரர்.
அமெரிக்காவில் சேர்த்தவரான அனு இம்மானுவேல், இந்தியாவில் படித்து கொண்டிருக்கும் போதே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் பின்னர் நிவின் பாலி ஜோடியாக ஆக்ஷன் ஹீரோ பிஜூ மூலம் கதாநாயகியானார். தற்போது தெலுங்கு சினிமாவில் வளர்ந்து முக்கிய ஹீரோயினாக இருந்து வருகிறார்.