கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய நபரொருவர் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.
ஒவ்வாமை காரணமாக அவர் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் நாளை (27) பரிசீலனை நடத்தப்படும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.
உயிரிழந்தவர் வரக்காபொலவை சேர்ந்தவர்.
அதுவரை குறித்த மருந்து நோயாளர்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1