கல்குடா மீனவர்கள் அதிரடி: சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் வளைத்துப் பிடிப்பு!

Date:

வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கல்குடா கடலில் சட்டவிரோத சுருக்கு வலை மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் மீனவக் குழுவொன்று இன்று பிரதேச மீனவர்களால் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டு உரிய அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது.

இந் நடவடிக்கையின் போது 36 மீனவர்கள், 10 படகுகள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் தங்களால் கைப்பற்றப்பட்டு கல்குடா பொலிஸ் மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பேத்தாழை மீனவ சங்கத் செயலாளர் பிரான்சிஸ் ரமேஸ்பாலு தெரிவித்தார்.

மாங்கேணி,காயான்கேணி, வட்டவான், நாசிவன் தீவு ஆகிய மீன் பிடி கிராமங்களைச் சேர்நதவார்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

நீண்டகாலமாக தொடர்ந்து நடந்து வந்த இந் நடவடிக்கை குறித்து உரிய தரப்புக்களுக்கு தங்களால் பலமுறை அறிவித்தல் விடுத்தபோதிலும் யாரும் கண்டுகொள்ளாத நிலையில், சட்டவிரோத மீன்பிடி தொடர்ந்து கொண்டிருந்ததாக பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்று வெள்ளிக்கிழமை (25) அதிகாலை கிராம மக்கள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது கைப்பற்றப்பட்ட படகுகள், மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றுக்கு ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நீண்ட காலமாக பிரதேச கடலில் வெளிமாவட்ட,உள்ளுர் மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதால் தங்களது வழமையான மீன் பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதரமும் பாதிக்கப்படுள்ளதாக கவலை தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தாங்கள் முன் வந்து இவ் தீர்மானத்தை மேற்கொண்டு சுருக்குவலை மீன் தொழிலை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தங்களைப் போன்று மாவட்டத்திலுள்ள மீன் பிடி சங்கங்கள் முன் வந்து இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்ள முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

-க.ருத்திரன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்