பிரிக்ஸ் அமைப்பின் உறுப்புரிமையை இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று (25) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கூட்டாக ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பை ஏற்படுத்தியதுடன், ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கும் நாடுகளுடன் கலந்தாலோசித்து, கூட்டமைப்பில் அங்கம் வகிக்க தேவையான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் மூலோபாய இடத்தின் அனுகூலத்தைப் பயன்படுத்தி பொருளாதார சுபீட்சத்தை அடைய இது பெரிதும் உதவும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய ஐந்து BRICS உறுப்பு நாடுகள் உலகின் மொத்த நிலப்பரப்பில் 27 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, சமீபத்திய அறிக்கைகளின்படி, உலக மக்கள்தொகையில் 42 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த நாடுகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள் என்று உதய கம்மன்பில கூறினார்.