லங்கா சமசமாஜக் கட்சியின் செயலாளராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண செயற்பட தடைவிதிக்கக்கோரிய வழக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது.
கட்சியின் செயலாளராக பதவியேற்றதாக கூறப்படும் டபிள்யூ. அபேசேன, திஸ்ஸ விதாரன செயலாளராக பதவி வகிக்க தடைவிதிக்க கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், திஸ்ஸ விதாரன செயலாளராக பதவிவகிக்க இடைக்கால தடைவிதித்து ஜூலை 17ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.
தடை உத்தரவுக்கு எதிராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான, தடை உத்தரவை கலைத்து இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்க மறுத்தார்.
இதன்படி, கட்சியின் செயலாளராக பேராசிரியர் விதாரண தொடர்ந்தும் பதவி வகிக்க முடியும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1