மட்டக்களப்பு -கொழும்பு பிரதான வீதியில் புணானை பகுதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி, பரிகாரியார் வீதியைச் சேர்ந்த ஸர்பராஸ் ஹிசை முகம்மது அஸாம் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
றிதிதென்னையில் வசிக்கும் தனது தந்தையாரை சென்று பார்த்து விட்டு தமது நண்பருடன் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வரும்போது கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி எதிரே வந்த தனியார் பஸ்சுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
காயமுற்றவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனம் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
-க.ருத்திரன்-