ரஷ்யாவின் தனியார் இராணுவமான வோக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உள்ளிட்ட 10 பேர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மொஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி பயணித்த போது விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 10 பேரில் பிரிகோஜினும் ஒருவர் என ரஷ்யாவின் ஏவியேஷன் ஏஜென்சி ரோசாவியாட்சியா தெரிவித்துள்ளது.
ட்வெர் பிராந்தியத்தில் உள்ள குஷென்கினோ கிராமத்திற்கு அருகே புதன்கிழமை விமானம் விபத்துக்குள்ளானதாக ரஷ்யாவின் அவசர சூழ்நிலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி மாலை 6:19 மணிக்கு (15:19 GMT) விமானம் “திடீரென்று கீழ்நோக்கி செங்குத்தாக” சென்றதாக Flightradar24 இன் இயன் பெட்செனிக் தெரிவித்தார்.
சுமார் 30 வினாடிகளுக்குள், விமானம் 28,000 அடி உயரத்தில் இருந்து 8,000 அடிக்கு மேல் சரிந்தது.
ரஷ்யா சார்பு தொலைக்காட்சி நிலையமான Tsargrad TV அதன் சொந்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி, பிரிகோஜின் உடல் தற்காலிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளது, ஆனால் DNA பகுப்பாய்வு இன்னும் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
Major Breaking News:
Private jet of Wagner boss Yevgeny Prigozhin has crashed in the Tver Region. Prigozhin was on the passenger list. Wagner channel “Greyzone” accuses that Russian air defense shot it down.
It was inevitable that the feud between Putin and Prigozhin will end… pic.twitter.com/NYGhnCrkBp
— (((Tendar))) (@Tendar) August 23, 2023
ப்ரிகோஜினின் வோக்னர் கூலிப்படையுடன் இணைந்த கிரே சோன் டெலிகிராம் சேனல், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறியது. ஆனால் அதன் கூற்றை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை.
வோக்னர் குழுவின் உயர் தளபதி டிமிட்ரி உட்கினும் விமானத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஆனால் என்ன நடந்திருக்கலாம் என்பது குறித்து எந்த ஆரம்பக் கோட்பாட்டையும் வழங்கவில்லை என்று ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து ஆணையமான ரோசாவியட்சியா கூறியது.
ஒரு காலத்தில் விளாடிமிர் புடினின் நெருங்கிய உதவியாளராக இருந்த ப்ரிகோஜினின், அண்மையில் திடீர் கலகம் மேற்கொண்டார். இது தோல்வியில் முடிந்தது. ப்ரிகோஜினும் புடினும் 1990களில் இருந்து ஒருவரையொருவர் அறிந்திருக்கிறார்கள். “புடினின் சமையல்காரர்” என்ற புனைப்பெயர் பெற்றார்.
பிரேசிலியன் எம்ப்ரேயர் எக்சிகியூட்டிவ் ஜெட் மொடலில் பிரிகோஜின் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வகை விமானங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலான சேவையில் ஒரே ஒரு விபத்தை மட்டுமே பதிவு செய்துள்ளதாக சர்வதேச விமானப் போக்குவரத்து தலைமையக இணையதளம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் லெகசி 600 விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்திருப்பதாக எம்ப்ரேயர் கூறியது.
லெகசி 600 மொடல் 2002 இல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. சர்வதேச விமானப் போக்குவரத்து தலைமையகத்தின் படி, 2020 இல் உற்பத்தி நிறுத்தப்படும் வரை கிட்டத்தட்ட 300 தயாரிக்கப்பட்டது.
லெகசி 600 சம்பந்தப்பட்ட ஒரே ஒரு விபத்து மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது, இது 2006 இல் பிரேசிலில் உள்ள எம்ப்ரேயர் தொழிற்சாலையிலிருந்து அமெரிக்காவிற்கு செல்லும் வழியில் கோல் போயிங் 737-800 விமானத்தில் மோதியதில் நிகழ்ந்தது என்று சர்வதேச விமானப் போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது.
விமானத்திற்கு சேதம் ஏற்பட்ட போதிலும், எம்ப்ரேயர் பைலட் விமானத்தை தரையிறக்கினார் மற்றும் உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் இல்லை. அடுத்தடுத்த விசாரணையில், எந்த இயந்திரக் கோளாறுக்கும் பதிலாக, குழுவினர் மீது குற்றம் சாட்டப்பட்டது என்று இணையதளம் தெரிவித்துள்ளது.