அகுருவாதோட்டை உருதுதாவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் பதினொரு மாத பெண் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் களுத்துறை மல்வத்தை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ சிப்பாயின் சடலம் நேற்று (22) பிற்பகல் அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
வரகாகொட சல்கஸ் வத்த மாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஏ.ஏ.டி.பிரியன் மதுரங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் அகுருவத்தோட்ட உருதுதாவ பிரதேசத்தில் வசிக்கின்றார். 24 வயதான வாசனா குமாரி மற்றும் 11 மாத பெண் குழந்தை தஸ்மி திலன்யா ஆகியோரின் படுகொலை தொடர்பில் அகுருவத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த வாசனாகுமாரியின் கணவரின் சகோதரியின் கணவரான இவர், இரணுவத்திலிருந்து விலகி முச்சக்கர வண்டி சாரதியாக பணிபுரிகிறார். வாசனாகுமாரியில் ஏற்பட்ட மயக்கத்தில், அவரை தொல்லைப்படுத்தி வந்த நிலையில், இந்த கொலை நடந்தது.
தற்கொலை செய்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.