உலக செஸ் சம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் டை-பிரேக்கர் ஆட்டம் நாளை (24) நடைபெற உள்ளது.
10 வது உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான நோர்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென்-இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர்.
இரண்டு சுற்றுகள் கொண்ட இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் ஆட்டத்தின் 35 வது நகர்த்தலுக்கு பிறகு முதல் சுற்று சமனிலையில் முடிந்தது.
இதையடுத்து இன்று 2 வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 2வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார்.
இந்நிலையில் 30 நகர்தல்களுக்குப் பிறகு இன்றைய ஆட்டமும் சமனிலையில் முடிந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் டை-பிரேக்கர் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
Magnus Carlsen takes a quiet draw with white against Praggnanandhaa and sends the final to tiebreaks. The winner of the #FIDEWorldCup will be decided tomorrow!
📷 Maria Emelianova pic.twitter.com/aJw1vvoFnK
— International Chess Federation (@FIDE_chess) August 23, 2023



