காலி முகத்திடல் கடற்கரையில் உயிரிழந்த நான்கு ஆமைகளின் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு மரணத்திற்கான காரணம் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பெல்லன்வில கால்நடை வைத்தியருக்கு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (22) உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைகளை முடித்த பின்னர் ஆமைகளின் சடலங்களை அடக்கம் செய்யுமாறும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வனவிலங்கு அதிகாரி சமன் லியங்கமவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த கடற்பரப்புகளுக்கு அருகில் ஆமைகள் உயிரிழந்தமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்த அதிகாரி, வெள்ளவத்தை மற்றும் தெஹிவளை கடற்பரப்பில் ஆமைகளின் சடலங்கள் இருப்பதாகவும், ஏனைய ஆமைகளின் சடலங்கள் கடலில் மிதப்பதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.