26.7 C
Jaffna
December 15, 2024
Pagetamil
விளையாட்டு

முன்னாள் சிம்பாவே சகலதுறை வீரர் ஹீத் ஸ்ட்ரீக் 49 வயதில் காலமானார்!

சிம்பாப்வே அணியின் முன்னாள் கப்டன் ஹீத் ஸ்ட்ரீக் தனது 49 வயதில் புற்றுநோயால் காலமானார்.

சகலதுறை வீரரான ஹீத் ஸ்ட்ரீக் நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்., எனவே அவருக்கு நெருக்கமானவர்களுக்கு இந்த செய்தி ஆச்சரியமாக இருக்காது. கிரிக்கெட்டின் மிகச்சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவரான ஸ்ட்ரீக், 90 களின் பிற்பகுதியிலும் 2000 களின் முற்பகுதியிலும் சிம்பாப்வே அணியின் கப்டனாக இருந்தார்.

ஹீத் ஸ்ட்ரீக் ஸ்பெசல்கள்

புதிய பந்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் திறமை ஸ்ட்ரீக்கிற்கு இருந்தது. ஒரு காலத்தில் சிம்பாவே தரப்பில் அவரே ஆரம்ப பந்துவீச்சாளர்.  டெஸ்ட் கிரிக்கெட்டில் 216 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 239 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். சிம்பாப்வே அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர் அவர்தான்.

100 டெஸ்ட் விக்கெட்டுகளுக்கு மேல் சிம்பாப்வேயின் முதல் மற்றும் ஒரே பந்துவீச்சாளர். 100 ODI விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த நான்கு சிம்பாப்வே பந்துவீச்சாளர்களில் ஒருவர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 1,000 ஓட்டங்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் மற்றும் ஒரே சிம்பாப்வே வீரர் ஆவார்.

சிம்பாப்வே சார்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். ஸ்ட்ரீக் 7 முறை 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

குற்றச்சாட்டு

ஐசிசியின் ஊழல் எதிர்ப்புக் கொள்கைகளை மீறியதற்காக ஸ்ட்ரீக் அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலிருந்தும் ஏப்ரல் 2021 அன்று எட்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டார். ஹீத் ஸ்ட்ரீக், “மிஸ்டர் எக்ஸ்” காண்டாக்ட் பிளேயர் என்று அழைக்கப்படும் ஒரு ஊழல்வாதிக்கு உதவியதாகக் கண்டறியப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆண்: மருத்துவ அறிக்கையில் உறுதி

Pagetamil

ஐபிஎல் 2025: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!

Pagetamil

Leave a Comment