திருகோணமலை கடற்படை தளத்திலுள்ள இறங்குதுறையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், இறங்குதுறையை பார்வையிட வந்த 19 பேர் காயமடைந்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (22) பிற்பகல் இந்த சம்பவம் நடந்தது.
காயமடைந்த 15 பேர் கடற்படை வைத்தியசாலையிலும் எஞ்சிய நால்வர் திருகோணமலை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த குழுவினர் கல்கமுவ பிரதேசத்தில் இருந்து சுற்றுலா வந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1