26.4 C
Jaffna
December 14, 2024
Pagetamil
சினிமா

நடிகர் யோகிபாபு மீது போலீஸில் தயாரிப்பாளர் புகார்

நகைச்சுவை நடிகர் யோகிபாபு மீது சினிமா தயாரிப்பாளர் ஒருவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வளசரவாக்கம் பழனியப்பா நகரை சேர்ந்தவர் ஹாஷீர் (48). விருகம்பாக்கம் சின்மயா நகரில் திரைப்பட நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்.

இவர். வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: நான் தயாரிக்கும் ‘ஜாக் டேனியல்’ என்ற படத்தில் நடிப்பதற்காக நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிடம் பேசினேன். படத்தில் நடிக்கசம்பளமாக ரூ.65 லட்சம் பேசி, முன் பணமாக ரூ.20 லட்சம் யோகிபாபு பெற்றுக்கொண்டார். பின்னர் படப்பிடிப்பு தொடங்கியதும் யோகிபாபுவை அழைத்தபோது, அவர் வரவில்லை.

படப்பிடிப்புக்கு வராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் காலம் தாழ்த்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

‘புஷ்பா 2’ வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24 இல் வெளியீடு

Pagetamil

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பிரிவுக்கும் மோஹினி தேவுக்கும் தொடர்பா?: வழக்கறிஞர் விளக்கம்

Pagetamil

தெலுங்கு நடிகருடன் திருமணமா?: விஜய் பட நாயகி விளக்கம்!

Pagetamil

இத்தனை வயதாகியும் அந்த விவகாரத்தில் நம்பிக்கையில்லாத நடிகை!

Pagetamil

Leave a Comment