காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் திடீரென நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்குள்ள கைதிகளுக்கு ஒரு வகையான காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட சில நாட்களில் அது தொடர்பான அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இது மெனிங்கோகோகல் எனப்படும் கொடிய பக்டீரியாவால் ஏற்படும் காய்ச்சல் என கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மெனிங்கோகோகல் பக்டீரியா குழந்தைகளுக்கு அதிக தீங்கு விளைவிப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். போதைப்பொருள் பாவனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.