கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சின்னக்கதிர்காமம் எனச் சிறப்பித்துக் கூறப்படுகின்றதும் மூர்த்தி,தலம்,தீர்த்தம் என முறையாக அமையப்பெற்றதுமான வெருகலம்பதி அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் கொடியேற்றம் நேற்று (19) சனிக்கழமை வளர்பிறை துதியை திதியும்,உத்தர சட்சத்திரமும்,சித்த யோகமும் கூடிய சுப வேளையில் நண்பகல் 12.03. மணிக்கு இடம்பெற்றது.
மூல மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்று கொடி மரத்திற்கு விசேட கிரியைகள் இடம்பெற்றது. மரபு ரீதியான முறையில் ஆலயக் கங்காணம் இராசைய்யா ஞானகணேசன் என்பவரால் கொடிச்சேலை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அருள்மிகு கெஜா வல்லி, மஹாவல்லி சமேதமாக ஸ்ரீ சித்திரவேலாயுர் சுவாமியின் கொடியேற்ற்ற இடம்பெற்றது.
இதன்போது அடியார்களின் அரோகரா கோஷத்துடனும் மங்களவாத்தியம் முழங்க, சிவாச்சாரிய குருமார்களின் வேத மந்திர பாராயணத்துடன் கொடியேற்றம் இடம்பெற்றது.
கொடியேற்றத்தில் நாட்டின் பல பாகத்திலும் இருந்து அதிகளவு பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து 18 தினங்கள் திருவிழாக்கள் நடைபெற்று 6.9.2023 புதன் கிழமை அதிகாலை 4.15 மணிக்கு தீ மிதிப்பு வைபவமும் காலை 7;.10 மணிக்கு புனித கங்கையிலே தீர்தோற்சவமும் நடைபெறும்.

-க.ருத்திரன்-



