ஹலவத்தை மேற்கு இரணவில சமிந்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த ஒன்பது வயது மாணவியின் சடலம் இன்று மாலை கயிற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக ஹலவத்தை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சலானி பீரிஸ் என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
மாணவியின் மரணம் சந்தேக மரணம் எனக் கருதி ஹலவத்தை தலைமையக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறுமியின் தாயார் சுமார் இரண்டு வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஹலவத்தை தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவத்தின் போது சிறுமியின் தந்தை தோட்டத்தில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் சடலம் மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1