ஓட்டமாவடியிலும் கருப்புக்கொடி

Date:

கருப்பு ஓகஸ்ட்-11 துக்க தினம் இன்று (11) ஓட்டமாவடி பிரதேசத்தில் நினைவு கூரப்பட்டது.

வாழைச்சேனை,ஓட்டமாவடி,நாவலடி போன்ற பொது இடங்களில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டும்.சுவரொட்டிகள் ஒட்டப்பட்டும் துக்கதினம் நினைவு கூறப்பட்டது.

1990 ஓகஸ்ட் மாதம் ஏறாவூர் மற்றும் காத்தான்குடி போன்ற இடங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்தும் ஜ.நா.மனித உரிமைகள் பேரவை புலிகளுக்கு ஆதரவான அனைத்து நியாயங்களையும் கண்டிக்க வேண்டும் என்று தெரிவித்து இந்த துக்க தினம் நினைவு கூறப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமையானதால் வழமை போன்று வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை.

இதேவேளை, கிழக்கு முஸ்லிம் பகுதிகளில் ஒரே விதமான சுவரொட்டிகள், கோசங்கள் காணப்பட்டதன் மூலம், இந்த நடவடிக்கையின் பின்னணியில் யாரே ஒரு தரப்பு செயற்பட்டுள்ளது புலப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-ரூத் ருத்ரா-

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர், ஈரான் குறித்த...

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்