பல்கலைகழக மாணவர் பேரணிக்கு தடை!

Date:

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (10) நடத்தும் எதிர்ப்பு ஊர்வலம் பல வீதிகளுக்குள் செல்வதைத் தடுக்கும் வகையில் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகி மருதானை மருதானை சந்தி, டீன்ஸ் பார்க், ஒரபிபாஷா மாவத்தை ஆகிய இடங்களிலிருந்து டெக்னிக்கல் சந்தி, ஒல்கெட் மாவத்தை வழியாக ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணி செல்லவுள்ளதாக மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளதாக, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வீதிகள் மற்றும் நடைபாதைகளை பயன்படுத்தும் பயணிகள் மற்றும் சாரதிகள் பயன்படுத்த முடியாத வகையில் எதிர்ப்பு பேரணிகளை நடத்துவதற்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அமைப்பாளர் விதாரண மதுஷான் இந்திரஜித், பிக்குகள் பேரவையின் அமைப்பாளர் கல்வெவ சிறிதர்ம உள்ளிட்ட 10 பேருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும்...

ஹட்டன் மண்சரிவில் 4 பேர் மாயம்

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...

ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்

06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்