ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் எங்களுக்கு தீபாவளி என, அவரது ரசிகர்கள் மதுரையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.
நடிகர் ரஜினிகாந்தின் 169 வது திரைப்படமான ஜெயிலர் இன்று வெளியானது. மதுரையில் மட்டும் 28 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. காலை 8.30 மணிக்கு தொடங்கிய இத்திரைப்படத்தைக் காண ரஜினியின் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். சிலர் கைதிகள் போன்று உடையணிந்தும் சென்றிருந்தனர்.
மதுரை பழங்காநத்தம் ஜெயம், திரையரங்கில் ‘ஜெயிலர்’ படம் வெளியானதையடுத்து அங்கு குவிந்த ரசிகர்கள் ‘ரஜினி படம் எங்களுக்கு தீபாவளி’ என, பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர். முன்னாள் காவல் துறை உதவி ஆணையரும் ரஜினி மன்ற நிர்வாகியுமான குமரவேல் தலைமையில் ‘மது குடிக்க மாட்டோம்’ என உறுதி மொழியேற்றனர். ரஜினி மன்றத் தலைவர் பால தம் புராஜ், துணைத் தலைவர் அழகர்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.