யாழ்ப்பாணத்தை சேர்ந்த நகைப் பட்டறை தொழிலாளி ஒருவரின் மனைவி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐகத் விசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (4) அவர் கைது செய்யப்பட்டார்.
ஆறுகால்மடம், பழம் வீதியை சேர்ந்த 37 வயதான 4 பிள்ளைகளின் தாயாரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பை சேர்ந்த அவர், இந்த பகுதியை சேர்ந்த நகைப்பட்டறை தொழிலாளியொருவரை திருமணம் முடித்து, நீண்டகாலமாக அங்கு வாழ்கிறார்.
அவரது வீட்டை சோதனையிட்ட போது 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
அவரிடம் ஹெரோயின் வாங்கிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பெண் தற்போதுதான் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த குடும்பம் பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளதாகவும், அதிலிருந்து மீள்வதற்காக ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.