25.5 C
Jaffna
December 13, 2024
Pagetamil
சின்னத்திரை

சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் மாரடைப்பால் மரணம்

‘நாதஸ்வரம்’ சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது சின்னத்திரை நடிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் சேனலில் ஒளிபரப்பாகி, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘நாதஸ்வரம்’ சீரியலில் நடித்ததன் மூலமாக நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இவருக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு இரு வீட்டார் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது. இந்நிலையில், திடீரென மாரடைப்பால் அரவிந்த் சேகர் மரணமடைந்துள்ளார்.

ஜிம், உணவு என ஃபிட்னஸில் ஆர்வம் கொண்ட அரவிந்த் சேகர் ’மிஸ்டர் தமிழ்நாடு 2022’ பட்டம் வென்றிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது உடல் நலத்தில் எப்போதும் அக்கறையுடன் இருக்கும் அரவிந்த் சேகர், மாரடைப்பால் மரணமடைந்தது நடிகர், நடிகைகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்துக்கு பின் சீரியலை விட்டு விலகி தொழில் கவனம் செலுத்தி வந்த அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இழப்பிலிருந்து மீண்டு வர ரசிகர்கள் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சின்னத்திரை நடிகர் நேத்ரன் மறைவு

Pagetamil

படுக்கைக்கு அழைத்த சீனியர் காமெடி நடிகர்.. கேரவனுக்கு இரகசியமாக அழைத்த நடிகை!

Pagetamil

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு

Pagetamil

‘யானை மிதித்து சாகக் கிடந்தேன்… தூக்கிச் சென்றவன் என் மார்பை பிடித்து சுகம் கண்டான்’: பிரபல தமிழ் சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்!

Pagetamil

கணவனை பற்றி வதந்தி பரப்பாதீர்கள்

Pagetamil

Leave a Comment