வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
தற்போதுள்ள பொதுமக்களின் நெருக்கடியை குறைக்கும் வகையில் இன்று (03) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1
1