வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட எனும் தொனிப்பொருளில் தலைமன்னார்
தொடக்கம் மாத்தளை வரையான நடை பயணத்திற்கு ஆதரவு தெரிவித்து வடக்கில்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஆரம்பமான நடைபயணம் நிகழ்வின் இன்று
இரண்டாம் நாள் கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிப் புறப்பட்டுள்ளது.
தலைமன்னார் தொடக்கம் மாத்தனை வரையான நடை பயணத்தில் நாளை ( 04 )
இணைந்துகொள்ளும் வகையில் ஆரம்பிக்கப்படட இந்த நடை பயணம் முல்லைத்தீவு
புதுகுடியிருப்பில் ஆரம்பித்து கிளிநொச்சி வவுனியா ஊடாக மதவாச்சியில்
பிரதான நடை பயணத்துடன் இணைந்துகொள்ளவுள்ளது.
இன்றைய கிளிநொச்சி நடைபயணத்தில் ஏற்பாட்டாளர்களுடன் சிவில் சமூக
பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியில் கட்சிகளின்
பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1