26.8 C
Jaffna
December 15, 2024
Pagetamil
உலகம்

மனைவியை பிரிகிறார் கனடா பிரதமர்

தனது மனைவி சோஃபியை பிரிவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்த தம்பதியரின் 18 ஆண்டுகால மண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

51 வயதான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் 48 வயதான அவரது மனைவி சோஃபி கடந்த 2005 இல் மண வாழ்க்கையில் இணைந்தனர். இந்த தம்பதியருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தங்களது பிரிவு முடிவை சார்ந்து இருவரும் சட்டப்படியான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளனர். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

“அனைவருக்கும் வணக்கம். சோஃபியும் நானும் இந்த உண்மையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நீண்ட ஆலோசனைக்கு பின்னர் நாங்கள் இருவரும் கலந்து பேசி பிரிவதாக முடிவு செய்துள்ளோம்.

நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தி கொண்டுள்ளோம். அது தொடரும். எங்கள் குழந்தைகளின் தனியுரிமைக்கு மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி” என தனது பதிவில் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவில் பதவியில் இருக்கும் போது பிரிவை அறிவித்த இரண்டாவது பிரதமர் ட்ரூடோ ஆவார். முன்னதாக, அவரது தந்தை, பியர் ட்ரூடோ பிரதமராக பதவிவகித்த போது, 1979 இல் மனைவி மார்கரெட்டைப் பிரிந்தார், இருவரும் 1984 இல் விவாகரத்து செய்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இராணுவச் சட்டம் அமல் எதிரொலி: தென்கொரிய ஜனாதிபதி பதவி நீக்கத்துக்கு ஆதரவாக எம்.பி.கள் வாக்களிப்பு

Pagetamil

பல இலட்சம் கோடி சொத்தை உதறிவிட்டு பௌத்த பிக்குவான இலங்கைத் தமிழரின் மகன்!

Pagetamil

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 27 பேர் பலி

Pagetamil

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்: பின்னணியும் தாக்கமும் என்ன?

Pagetamil

உக்ரைன் போரை நிறுத்த சிறப்பு தூதரை நியமித்த ட்ரம்ப்

Pagetamil

Leave a Comment