கடுவெல, வெலிபாறை வீதியில் உள்ள புதர் பகுதியில் நிர்வாணமான நிலையில் நேற்று (2) கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் காணப்பட்டதாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.
கொத்தடுவ பகுதியை சேர்ந்த பசிந்து சாமர மதுஷங்க என்ற நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து இந்த நபர் சிலரால் கொல்லப்பட்டு இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
போதைப்பொருள் வர்த்தகத்தினால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த கொலை தொடர்பான விசாரணை மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1