25 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இலங்கை

13வது திருத்தம் தொடர்பான பிரேரணையை அடுத்த வாரம் ரணில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்!

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்து இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் அணுகுமுறையை விரிவாகக் கூறுவார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தியதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியலமைப்பில் உள்ளடங்கியுள்ள 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தமக்கு எதிர்ப்பு இல்லையென்றாலும், நாட்டில் பெரும்பான்மையினரால் எழுந்துள்ள கரிசனை காரணமாக ஆரம்ப கட்டமாக பொலிஸ் அதிகாரம் இல்லாமல். 13வது திருத்தத்தை அமுல்படுத்த முன்வந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த விடயத்தையும் முன்மொழிந்தார்.  எனினும், தமிழர் தரப்பு உப்புச்சப்பில்லாத ஜனாதிபதியின் முயற்சியை நிராகரித்துள்ளனர். அதிகார பரவலாக்கல் அர்த்தபூர்வமானதாக அமைய வேண்டுமென உறுதியாக தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினையை அரசியலாக்காமல் விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருப்பதால், இந்தப் பிரேரணைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களை ஆராய்ந்து இந்த விடயம் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது விசேட உரையின் போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான யோசனைகளையும் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘அர்ச்சுனாவை பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்… அவருக்கு வாக்களித்தவர்கள் வெட்கப்பட வேண்டும்’: சைவ குருமார் கொந்தளிப்பு!

Pagetamil

கைதடி கிணற்றில் மீட்கப்பட்ட சிசு: கள்ளக்காதலால் விபரீதம்… சகோதரியுடன் சிக்கியது எப்படி?

Pagetamil

மதுபான தொழிற்சாலை சுற்றி வளைப்பில் ஒருவர் கைது

east tamil

யாழில் கரையொதுங்கிய மற்றொரு மிதவை

Pagetamil

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

east tamil

Leave a Comment