Pagetamil
இலங்கை

யுவதியின் உள்ளாடைக்குள் போலி விசா: இத்தாலி செல்ல முற்பட்ட யாழ் ஜோடி சிக்கியது!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதி இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (1) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம். சங்கானைப் பிரதேசத்தில் வசிக்கும் இந்தத் தம்பதிகளில் இளைஞனுக்கு 27 வயது. யுவதிக்கு 28 வயது.

அன்று மாலை 5.00 மணியளவில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபிக்கு புறப்பட்ட எதிஹாட் எயார்லைன்ஸின் TY-279 விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் மீதான சந்தேகத்தின் அடிப்படையில் குடிவரவு. குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டு. அவர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகளை சோதனையிட்ட போது ​​பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட இரண்டு கடவுச்சீட்டுகளும் இந்த இளைஞனிடம் இருந்த போலி விசாவும் கண்டுபிடிக்கப்பட்டது.

யுவதியின் வீசா தொடர்பில் வினவிய போது அந்தப் பெண் மௌனம் காத்தமையால். குடிவரவு குடியகழ்வு பெண் அதிகாரி வரவழைக்கப்பட்டு யுவதியின் உடலை பரிசோதித்த போது அவரது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இத்தாலிய வீசா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு போலி கடவுச்சீட்டுகளின் உண்மையான உரிமையாளர்களான கோட்டை பகுதியில் வசிக்கும் தம்பதியினர் ஏற்கனவே தங்களுடைய உண்மையான கடவுச்சீட்டு மற்றும் விசாக்களை பயன்படுத்தி இந்த விமானத்தில் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சீனாவில் பரவும் புதிய வைரஸ் இலங்கைக்கு புதியதல்ல!

Pagetamil

பேஸ்புக்கில் பியரை விளம்பரப்படுத்தியவருக்கு ரூ.25,000 அபராதம்!

Pagetamil

வில்பத்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 11 டொல்பின்கள்: மர்மம் தீராது, விசாரணை தீவிரம்

east tamil

100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்குள் நுழையவுள்ளனர்: ஜேவிபி சொல்லும் கதை!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment