25.3 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

பாராளுமன்றத்தில் பணியாற்றும் அழகான யுவதிகளுக்கும் பாதுகாப்பில்லை: அதிர வைக்கும் பாலியல் அத்துமீறல் முறைப்பாடுகள்!

பாராளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் பராமரிப்புதுறையின் சில முக்கியஸ்தர்கள் உட்பட சில அதிகாரிகளின் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற மகளிர் பாராளுமன்ற உறுப்பினர் மன்றத்தின் தலைவி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே பாராளுமன்ற பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

அண்மையில், பாராளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் பராமரிப்புப் பிரிவில் உள்ள அழகான இளம் பெண்கள், சில தலைவர்களால் துன்புறுத்தப்படுவதாக  நாடாளுமன்றத் தலைவர்களிடம் முறையிட்டனர்.

குறிப்பிட்ட சில மேலதிகாரிகளாலும் அதிகாரிகளாலும் தாம் குறிப்பிட்ட காலப்பகுதியில் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இணங்காத பட்சத்தில் பல்வேறு வகையான பழிவாங்கலுக்கு ஆளாக நேரிடும் எனவும் ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் நீதி கோரி வரும் யுவதிகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம் (ஹொட்லைன்) அறிமுகப்படுத்தினால் அனைத்து தகவல்களையும் இரகசியமாக கூற தயாராக உள்ளனர்.

வேலை பறிபோகும் என்ற அச்சத்தில் சில ஊழியர்கள் இது குறித்து முறைப்பாடு செய்யக்கூட அஞ்சுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பராமரிப்புத் துறையில் இளம் பெண்களுக்கு நடப்பதாகக் கூறப்படும் அடக்குமுறை குறித்து எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் தயாராக உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடுதியில் வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

east tamil

இலங்கைக்கு இந்திய அரசின் நிதி ஒதுக்கீடு

east tamil

போதைப்பொருளை பிடிக்க புதிய தொலைபேசி இலக்கம்

east tamil

கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

east tamil

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி

east tamil

Leave a Comment