பாதுக்க பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பேய் ஒன்று சுற்றித் திரிவதாக மாணவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையின் மாணவிகள் விளையாட்டுக் குழுவொன்றுடன் மட்டுமே இந்த பேய் காணப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தும் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தமது பிள்ளைகள் தமக்கு தெரிவித்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு முறையும் அந்த மாணவிகள் விளையாட்டுக் குழு விளையாடுவதற்காக மைதானத்திற்குச் சென்றபோது, வகுப்பிலிருந்து மைதானத்திற்குச் சென்றவர்களை விட ஒருவர் அதிகமாகக் கணக்கிடப்பட்டதாகவும், இந்த சம்பவங்களால் தாங்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதை யாரிடமாவது சொன்னாலும் அவர்கள் நம்ப மறுக்கிறார்கள், ஆனால் மைதானத்தில் தாம் பேயால் துன்புறுத்தப்படுவதுவது உண்மையென பிள்ளைகள் அச்சமடைந்துள்ளதாக பெற்றோர் கூறுகிறார்கள்.
விளையாட்டு அணிக்கு பொறுப்பான ஆசிரியையும் பல தடவைகள் பேயை உணர்ந்து பயந்து கூச்சலிட்டுள்ளதாகவும், இதனால் விளையாட்டு அணியிலுள்ள மாணவிகள் அச்சமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலைமையால் பாடசாலையில் விரைவில் பிரித் ஓதுதல் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்து கவனத்தில் கொள்ளப்பட்ட போதிலும், பிள்ளைகளின் மனதை தெளிவுபடுத்த விஞ்ஞான ரீதியான கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும் பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சில தடவை குழு புகைப்படங்கள் எடுத்தபோது, அனாமதேய நபர் ஒருவரும் திடீரென புகைப்படத்தில் தோன்றியுள்ளதாக மாணவிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பாடசாலையின் ஆசிரியர்கள் சிலர் மறுப்பு தெரிவித்து, இது வெறும் வதந்தி என்றும், தங்கள் பாடசாலையில் இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.