தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 1ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இந்திய தூதரகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும்.
இந்தியாவிற்கு அழைக்கப்பட்டிருந்த இலங்கை ஜனாதிபதி, 13வது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்வதாக காண்பித்து வரும் சூழலில், தமிழ் தரப்புடனான சந்திப்பை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.