25.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

மாந்தை கிழக்கு பிரதேச செயலக குடியேற்ற உத்தியோகத்தரால் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக குடியேற்ற உத்தியோகத்தர் ஒருவரால் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

தனது ஊழல்களை உன்னால் எதுவும் செய்ய முடியாது, தேவையற்ற விதத்தில் மூக்கை நுளைக்காதே, என்றும் தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தியதாகவும் ஊடகவியலாளரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச பகுதிகளில் இடம்பெறும் அத்துமீறிய அரச காடழிப்பு சம்பவங்களை செய்தி அறிக்கை செய்ததாக சந்தேகித்தே குறித்த ஊடகவியலாளரை குடியேற்ற உத்தியோகத்தர் அச்சுறுத்தியதாக ஊடகவியலாளர் தெரிவித்தார்.

இது குறித்து வரும் திங்கள்கிழமை பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் ஊடகவியலாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்படவுள்ளது

அண்மைக்காலங்களாக குத்தகை அடிப்படையில் காணி வழங்கல் மாந்தை கிழக்கில் அதிகரித்து காணப்பட்ட போதிலும், குறித்த பகுதியில் வயற்காணி அற்று 574 குடும்பங்கள் இருப்பதாக பிரதேச செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன

இதே வேளை குத்தகை அடிப்படையில் காணி வழங்க முன்னர், கிராமங்களில் வசிக்கும் வயற்காணி அற்ற மக்களின் பிரச்சைனைகளுக்கு தீர்வை கண்டு அதன் பிற்பாடு குத்தகை முறைமையை அமுல்படுத்துமாறு பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் பிரதிநிதிகள் பல்வேறு அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிட தக்கது

இதே வேளை குத்தகை அடிப்டையில் காணி பெறுவோர் கேட்கும் அளவை விட மேலதிக காணிகளை அபகரிப்பதாகவும், அதனை தடுத்து, குத்தகையில் பெற்று மேலதிக காணிகள் வைத்திருந்தால் அவற்றினை வயற்காணிகளற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு பிரதேச பிரதிநிதிகளால் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததும் அதன் பிற்பாடு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரால் காணிகளற்ற மக்களுக்கு மேலதிக கையகப்படுத்தி வைத்திருக்கும் காணிகளை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

இதே வேளை மாந்தை கிழக்கில் சட்டவிரோத காடழிப்பு என 07-10-2022 அன்று பத்திரிகை மற்றும் இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி தொடர்பில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரால் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில்
செய்யப்ட்ட முறைப்பாட்டிற்கமைய அதே இடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர் ,நட்டாங்கண்டல் பொலிசாரினால் 27-10-2022 அன்றும், பிறிதொரு நாளில் மற்றுமொரு ஊடகவியலாளரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் பற்றிய தகவல்!

Pagetamil

தேசிய மக்கள் சக்தியின் மற்றொரு எம்.பியின் கல்வித் தகைமையில் சர்ச்சை!

Pagetamil

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

east tamil

Leave a Comment