சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (26) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்து, சென்னைக்கு சென்றார்.
மாலைதீவில் லிடுமுறையில் கழித்த ரஜினிகாந்த், சென்னை திரும்பும் வழியில் சிறிதுநேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்து நின்றார்.
மாலத்தீவில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-102 இல் ரஜினிகாந்த் இன்று (26) 11.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை விமான நிலைய ஊழியர்கள் மிக உயரிய முறையில் வரவேற்றுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து, அவர் இந்தியாவின் சென்னைக்குப் புறப்பட்டார்.
முன்னதாக கடந்த 14ஆம் திகதி மாலத்தீவு செல்லும் வழியில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு ரஜினிகாந்த் வந்திருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1