மீகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதாகவும், அவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொறுப்பதிகாரி விடுமுறையில் மொரவக பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு இன்று அதிகாலை 1.30 மணியளவில் பெலவத்தை ~ நெலுவ வீதியில் 13ஆம் மைல் கல்லுக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கார் வளைவுக்கு அருகில் இருந்த பாதுகாப்பு வேலியில் மோதி வீதியை விட்டு தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த பொறுப்பதிகாரி உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தினியாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1