12 வயது சிறுமி பிரசவித்த குழந்தையின் இரத்த மாதிரியையும், சந்தேகநபரின் இரத்த மாதிரியையும் டிஎன்ஏ சோதனைக்குட்படுத்துமாறு கோரி, பொலிசார் நீதிமன்றத்தில் முற்படுத்தியதையடுத்து, சந்தேகநபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஹொரவபொத்தான, ஒலுகஸ்கடலைச் சேர்ந்த சமன்சிறி என்ற 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரின் மனைவியின் மூத்த சகோதரியின் 12 வயது மகள் குழந்தை பிரவசித்திருந்தார்.
சந்தேகநபர் ஏற்கெனவே திருமணம் செய்தவர். முதல் மனைவியை பிரிந்து, மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில், மனைவியின் சகோதரியின் மகளிடம் கைவரிசை காண்பித்திருந்தார்.
சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேபநபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
சந்தேகநபர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து வந்திருந்தார்.
இதையடுத்து, சிறுமி பிரசவித்த குழந்தையினதும், சந்தேகநபரினதும் இரத்த மாதிரிகளை பெற்று, டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரி, சந்தேகநபரை நீதிமன்றத்தில் பொலிசார் முற்படுத்தினர்.
இந்த நிலையில் சந்தேகநபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.