பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை கத்துக்குட்டித்தனமாக விளையாடி வருகிறது. போதிய வெளிச்சமில்லாமல் இன்று முன்னதாகவே நிறுத்தப்பட்ட ஆட்டத்தில், பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்களை பெற்றுள்ளது.
முன்னதாக, நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை. 48.4 ஓவர்களில் 166 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.
தனஞ்ஜய டி சில்வா மட்டும் 57 ஓட்டங்களை பெற்றார். கத்துக்குட்டி அணிகள் சிக்கினால் விளாசித்தள்ளும் இலங்கையின் சீனியர் வீரர்கள் அனைவரும், பலமான அணிகளுடன் ஆடும் வழக்கத்தின் பிரகாரம் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் நடையை கட்டினர்.
பந்துவீச்சில் அப்ரார் அகமட் 69 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலளித்து ஆடும் பாகிஸ்தான் 28.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்களை பெற்றுள்ளது. அப்துல்லா ஷபிக் ஆட்டமிழக்காமல் 74, ஷான் மசூத் 51 ஓட்டங்களை பெற்றனர்.
அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.