‘கங்குவா’வில் சூர்யாவுக்கு வில்லனாகும் பாபி தியோல்

Date:

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், ‘கங்குவா’. இதில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்படப் பலர் நடிக்கின்றனர். பீரியட் படமான இதை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது. வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

சூர்யாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ‘கங்குவா’ படத்தின் 2 நிமிட புரோமோ டீஸரை படக்குழு நேற்று அதிகாலை வெளியிட்டது. இதில் புதிய தோற்றத்தில் மிரட்டலாகத் தோன்றுகிறார் சூர்யா. இந்த டீஸரை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வைரல் ஆக்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு வில்லனாகப் பிரபல இந்தி நடிகர் பாபி தியோல் நடிக்கிறார். படத்தில் வில்லனுக்கும் முக்கியத்துவம் இருப்பதால் சூர்யாவுக்குச் சமமான நடிகர் வேண்டும் என்று அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாபி தியோல் தரப்பில் கூறும்போது, “பாபி, இதுவரை இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. அவர் தோற்றம், உடல்மொழி அனைத்தும் வித்தியாசமானது. ஓகஸ்ட் மாதம் பாங்காக்கில் நடக்கும் ஷெட்யூலில் பாபி தியோல் கலந்துகொள்வார்” என்று தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் நாளை (30.11.2026) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கான...

முடிவுக்கு வரவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் : அமைச்சர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு...

1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில் விரிவான ஆய்வு – விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்!

1983 ஜூலை மாதத்தில் இலங்கை முழுவதும் பரவிய கறுப்பு ஜூலை வன்முறைகள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்