ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைனிய ட்ரோன் தாக்குதலை முறியடித்து விட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது, நாட்டின் தலைநகருக்கு எதிராக “பயங்கரவாதச் செயலை” கைவ் தொடங்கியதாக குற்றம் சாட்டியுள்ளது.
திங்கள்கிழமை அதிகாலை இந்த தாக்குதலில் இரண்டு ட்ரோன்கள் ஈடுபட்டதாக அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“மொஸ்கோ நகரின் எல்லையில் உள்ள பொருட்களின் மீது ட்ரோன்களைப் பயன்படுத்தி ஒரு பயங்கரவாதச் செயலைச் செய்ய கிய்வ் ஆட்சியின் முயற்சி நிறுத்தப்பட்டது,” என்று அது கூறியது.
“இரண்டு உக்ரைனிய ட்ரோன்கள் அடக்கப்பட்டு நொறுங்கின. உயிர்ச்சேதம் எதுவும் இல்லை” என தெரிவித்தது.
உக்ரைனில் இருந்து எந்த கருத்தும் இல்லை.
ரஷ்ய TASS செய்தி நிறுவனம், ட்ரோன்களில் ஒன்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சுக்கு அருகில் உள்ள Komsomolsky Prospekt மீது விழுந்ததாகவும், மற்றொன்று மொஸ்கோவின் முக்கிய ரிங்ரோடு ஒன்றிற்கு அருகே உள்ள Likhacheva தெருவில் உள்ள வணிக மையத்தில் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளது.