பேஸ்புக் காதலையடுத்து ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, ஜா-எல மற்றும் வெலிவேரிய பிரதேசத்தை சேர்ந்த ஐந்து பெண்கள் பொலன்னறுவையில் உள்ள வீடொன்றுக்கு சென்று பெண் ஒருவரை தாக்கியுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பெண்களை பொலன்னறுவை பொலிஸார் நேற்று (23) கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 54 வயதுடைய பெண்ணும் அடங்குவதுடன், அவர் ஜா-எல பகுதியைச் சேர்ந்தவர்.
பொலன்னறுவையில் பெண்களால் தாக்கப்பட்ட யுவதியுடன் தனது மகனுக்கு தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த ஜோடி பேஸ்புக் ஊடாக அறிமுகமாகி காதலில் விழுந்துள்ளது.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னரே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய மூவரில் ஜா-எல மற்றும் வெலிவேரிய பிரதேசங்களில் வசிக்கும் 16 மற்றும் 19 வயதுடைய இரண்டு யுவதிகள் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.