வெரஹெர, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் 10 கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கியின் செப்புத் துண்டுகள் திருடப்பட்டுள்ளன.
6.5 மில்லியன் ரூபா பெறுமதியான செப்பு பட்டைகள் திருடப்பட்டுள்ளன.
வைத்தியசாலையின் சிரேஷ்ட மின் பொறியியலாளர் லெப்டினன்ட் கேணல் பி.கே.டி.கொடகந்த பொரலஸ்கமுவ பொலிஸில் நேற்று முன்தினம் (22) முறைப்பாடு செய்துள்ளார்.
திருடப்பட்ட செப்பு பட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.6,597,000 என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 30 முதல் ஜூலை 3 வரை இந்த திருட்டு நடந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், இந்த வைத்தியசலை வளாகத்தில் வெளியாட்கள் நுழைந்து இதுபோன்ற திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட இடமில்லை என பொலிஸார் கண்டறிந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1