உடப்பு காளி கோயிலில் திருடியவர் ‘இயக்கத்திடம்’ குங்ஃபூ பழகியவராம்!

Date:

உடப்பு காளி கோயிலில் உள்ள காளி சிலையிலிருந்த தங்கத்திலான கண்கள் மற்றும் தங்க ஆபரணங்களுடன், மேலும் பல கோயில்களில் தங்கம் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவரை உடப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முந்தல், கருங்காலிச்சோலையைச் சேர்ந்த தங்கராசா ரவீந்திரன் என்ற 30 வயதுடைய திருமணமான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 14ஆம் திகதி உடப்பு காளி கோவிலுக்குள் நுழைந்த சந்தேகநபர், காளி சிலையின் இரு கண்களில் பொருத்தப்பட்ட தங்கம், கழுத்தில் அணியப்பட்டிருந்த 21 பவுண் நகைகள் மற்றும் 2 இலட்சத்திற்கும் அதிக பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், முந்தல் நகரில் உள்ள காளி கோவிலுக்கு இரண்டு தடவைகள் சென்று அங்குள்ள தங்கம் மற்றும் பணத்தை திருடிய அதேநேரம் புத்தளம் பழைய மன்னார் வீதியிலுள்ள காளி கோவிலுக்கு இரகசியமாக சென்று அங்கும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர் திறமையான மேசன் எனவும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்று குங்ஃபூ உள்ளிட்ட பல தற்காப்புக் கலைகளை அவர் கற்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால் அவர் விடுதலைப் புலிகள். அமைப்புடன் தொடர் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்