மட்டக்களப்பில் காணாமல் போன முதியவரின் சடலம் மீட்பு!

Date:

மட்டக்களப்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன முதியவர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (15) மட்டு நகர் வாவிக்கரை வீதியிலுள்ள வாவியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சேத்துக்குடாவைச் சேர்ந்த 74 வயதுடைய சங்கரப்பிள்ளை கதிர்காமநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் கடந்த 5 ம் திகதி வீட்டை விட்டு காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடிய போது அவர் கிடைக்காததால் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் வாவிக்கரை வீதியிலுள்ள வாவியில் சடலம் ஒன்று உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியதை கண்ட பொதுமக்கள் பொலிசாருக்கு அறிவித்தனர்.

சடலத்தை உறவினர்கள் அடையாளம் காட்டியதுடன் அவருக்கு நீண்ட காலமாக காணப்பட்ட நோய் சுகமடையாது இருந்துள்ளதாகவும் அதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டவரை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஓப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...

ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்