வல்வெட்டித்துறையில் 15 வயது சிறுமியுடன் தலைமறைவாக குடித்தனம் நடத்திய 19 வயது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்த மேலும் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெருடாவில் பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுமியொருவர் கடந்த வருடம் தலைமறைவாகியிருந்தார். பெற்றோரின் சட்டபூர்வ காவலில் இருந்த சிறுமியை, 19 வயதான காதலன் கடத்திச் சென்றது தெரிய வந்தது.
பொலிசாரின் தீவிர விசாரணையை தொடர்ந்து, விசுவமடு பகுதியிலுள்ள வீடொன்றில் சிறுமியுடன், 19 வயதான இளைஞன் தலைமறைவாக குடும்பம் நடத்துவது தெரிய வந்தது.
இது தொடர்பில் சிறுமியை கடத்த, அவர்கள் தங்குவதற்கு ஒத்துழைத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். விசுவமடுவில் வீட்டு உரிமையாளரும் கைதானார்.
இதையடுத்து சிறுமியுடன் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் இளைஞன் சரணடைந்தார்.
இளைஞன் உள்ளிட்ட 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
மாணவி மருத்துவ பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.