27.1 C
Jaffna
January 12, 2025
Pagetamil
இந்தியா

‘கெட்ட மனிதர்களை மட்டுமே தண்டிப்பேன்’: சமூக ஊடகத்தில் அறிவித்துவிட்டு இரட்டைக் கொலை!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் (11) மாலை இரட்டைப் படுகொலை சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. ஏரோனிக்ஸ் இன்டர்நெட் என்ற இணையசேவை வழங்கும் நிறுவன அலுவலகத்தின் உயரதிகாரிகளான பனீந்திரா ரெட்டி, வினு குமார் ஆகியோர்தான் கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சந்தேக நபரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டிருந்த குறிப்பு பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புவதாக அமைந்துள்ளது.

முதல்கட்ட விசாரணையில் கொலை செய்துவிட்டு தப்பியோடியது சபரீஷ் என்ற ஃபெலிக்ஸ் எனத் தெரியவந்தது. ஏரோனிக்ஸ் இன்டர்நெட் என்ற தொழில்நுட்ப நிறுவனத்தில் சபரீஷ் முன்னர் வேலை செய்துவந்ததும் தெரியவந்தது. அப்போது அந்த நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் பனீந்திர சுப்ரமண்யா (36), தலைமைச் செயல் அதிகாரி வினு குமார் (40) ஆகியோருடன் சபரீஷுக்கு முன்விரோதம் ஏற்பட்டுள்ளதையும் போலீஸார் கண்டறிந்தனர்.

முன்விரோதம் காரணமாகவே அவர்களை சபரீஷ் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

சபரீஷ் அந்த நிறுவனத்தில் இருந்து விலகிய பின்னர், மற்றொரு இணையசேவை வழங்கும் நிறுவனத்தை தொடங்கினார். பனீந்திராவின் நிறுவனத்திலிருந்து மேலும் சிலர் விலகி, சபரீஷின் நிறுவனத்தில் இணைந்தனர்.

எனினும், பனீந்திரா புதிய நிறுவனத்தின் குறைகளை பிரச்சாரம் செய்து, தமது வாடிக்கையாளர்கள் ஊழியர்களை திருட முயன்றதாக சபரீஷ் தரப்பினர் கோபம் கொண்டிருந்தனர்.

அதற்கு வஞ்சம் தீர்க்கவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரிக்கின்றனர்.

செவ்வாய் மாலை கத்தியுடன் அலுவலகத்திற்குள் நுழைந்து பனீந்தரை வெட்டிக் கொன்றுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த வினு குமாரும் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இதற்கிடையில், அந்தக் கொலைக்கு முன்னால் சபரீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார். அது இப்போது போலீஸ் கவனத்துக்கு வந்துள்ளது. அந்தப் பதிவில் சபரீஷ், “மக்கள் வஞ்சனைகள் செய்கிறார்கள். நான் கெட்ட மனிதர்களை மட்டுமே தண்டிப்பேன். நல்லவர்களை எப்போது சிரமப்படுத்துவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இன்ஸ்டா பக்கத்தில் அவர் தன்னை ஒரு ஜோக்கர் போல் சித்தரித்துள்ளார். தன்னை ஒரு மாடல், கன்னட மொழிப் பாடல் ரேப்பர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். அவரை 16 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். சபரீஷின் நன்பர்கள் வினய் ரெட்டி, சந்தோஷ் ஆகியோர் போலீஸ் காவலில் உள்ளனர். அவர்களிடம் கொலை தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரிக்கு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘பெரியார் என்ன சமூகநீதி செய்தார்… பெண்ணுரிமை பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது’- சீமான்

Pagetamil

5 ஆண்டுகளில் 64 பேரால் பாலியல் வன்கொடுமை: காதலனின் துரோகம் மாணவியின் வாழ்வை சிதைத்த கொடூரம்

east tamil

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை: தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

Pagetamil

“நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி.

Pagetamil

ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி உயிரிழப்பு: தற்செயலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக போலீஸ் தகவல்

Pagetamil

Leave a Comment