சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் உருவான திரைப்படம், ‘போர் தொழில்’. கிரைம் த்ரில்லர் படமான இதை, அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கி இருந்தார்.
ஜூன் மாதம் 9ஆம் திகதி வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. உலக அளவில் ரூ.50 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாக கடந்த வாரம் இதன் விநியோகஸ்தர் தெரிவித்திருந்தார்.
இந்தப் படம் ஜூலை 7ஆம் திகதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது. ஆனால், திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் குவித்து வருவதால், ஓடிடி ரிலீஸ் தேதியை தள்ளிவைக்குமாறு தயாரிப்பு நிறுவனம், சோனி நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டது.
இதனால் ஓகஸ்ட் முதல் வாரத்தில் இந்தப் படம் சோனி லைவ் தளத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1