25.3 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

வடமராட்சியில் வீரமக்கள் தினம்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வீரமக்கள் தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வடமராட்சியில் அனுஷ்டிக்கப்பட்டது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினுடைய (புளொட்) வீரமக்கள் தினம் இன்றைய தினம் வடமராட்சி இராஜ கிராமத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இராஜகிராம இணைப்பாளர் சொக்கன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்ணனியின் உ வடமராட்சி இணைப்பாளர் பரஞ்சோதி மற்றும் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் கிஷோர் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இலங்கை நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அ.அமிர்தலிங்கம் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் ஆகியோருடைய திருவுருவ படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதோடு நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது இராஜகிராம பிரதேசத்துக்கு உட்பட்ட முன்பள்ளிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 60 முன்பள்ளி மாணவர்களுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் லண்டன் கிளை உறுப்பினர் அல்வின் அவர்களின் நிதி பங்களிப்பில் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடுதியில் வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

east tamil

இலங்கைக்கு இந்திய அரசின் நிதி ஒதுக்கீடு

east tamil

போதைப்பொருளை பிடிக்க புதிய தொலைபேசி இலக்கம்

east tamil

கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

east tamil

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி

east tamil

Leave a Comment