25.6 C
Jaffna
January 10, 2025
Pagetamil
குற்றம்

மாணவியின் மார்பகத்தை தொட்ட அதிபருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

விஞ்ஞானம் கற்பிக்கும் போது 12 வயது மாணவியின் மார்பைத் தொட்டு பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பாடசாலை அதிபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து, அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய உத்தரவிட்டார்.

இதற்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐம்பதாயிரம் ரூபா நட்டஈடு வழங்குமாறு குற்றஞ்சாட்டப்பட்ட அதிபருக்கு பிரதம நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய மேலும் உத்தரவிட்டார்.

காமினி சோமரத்ன என்ற அதிபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டார்.

12 வயது சிறுமியின் மார்பகத்தை 20016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தொட்டு இந்த குற்றச் செயலைச் செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் 345 ஆம் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அதிபருக்கு எதிராக அனுராதபுரம் தலைமையகப் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் வழக்குத் தாக்கல் செய்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வீடு உடைத்து பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கி கொள்ளையடித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

Leave a Comment