சுன்னாகம் பொலிஸ் பிரிவில் 19 வயதான இளம் யுவதியொருவர் தறவான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
ரிக்ரொக் காதலால் திருமணம் செய்த யுவதி, காதலனின் மிரட்டலால் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
19 வயதான யுவதியே கடந்த 8ஆம் திகதி உயிரை மாய்த்தார்.
தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், குடும்பத்தினரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த யுவதி வலிகாமத்தில் முன்னணி பாடசாலையொன்றின் கல்வி பயின்றவர். ரிக்ரொக் வீடியோக்கள் பதிவிடுபவர். ரிக்ரொக் மூலம் அறிமுகமான சீதுவ பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் காதல் வசப்பட்டு, கல்வியை இடைநடுவில் கைவிட்டு திருமணம் செய்து கொண்டார்.
கடந்த வருடம் திருமணம் நடந்தது.
காதலனுடன் சீதுவ பகுதியில் வசித்து வந்துள்ளார்.
யுவதியின் காதலன் 24 வயதானவர். அவருக்கு எந்த தொழிலும் இல்லை. தனது காதல் மனைவியை, நண்பர்களுடன் பகிர்ந்து பணமீட்ட திட்டமிட்டுள்ளார். நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து, நண்பர்களுடன் நெருக்கமாக இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
எனினும், காதலி அதை நிராகரித்து, கணவருடன் முரண்பட ஆரம்பித்தார்.
இதனால் இருவருக்குமிடையில் முரண்பாடு முற்றி, கடந்த 3 மாதங்களின் முன்னர் கணவரை பிரிந்து, பெற்றோரிடம் வந்துள்ளார்.
சாவகச்சேரியில் காணி விற்பனைக்குண்டு!
திருமணத்தின் பின்னர் தம்பதியர் நெருக்கமாக இருந்த போது எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் கணவன் வசம் இருந்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு வருமாறும், சீதுவைக்கு வந்து, தான் சொல்வதை கேட்டு, செயற்படுமாறும், அவ்வாறு செய்யாவிட்டால், அவரது அந்தரங்க காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றி விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிய வருகிறது.
தினமும் தொலைபேசி அழைப்பேற்படுத்தி கணவன் தொல்லை கொடுத்த நிலையில், மனவிரக்திக்குள்ளான யுவதி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக இளையவர்களை கவர்ந்திழுக்கும் பல்வேறு ஆபத்துக்களை சுட்டிக்காட்டுவதாக இந்த சம்பவமும் அமைந்துள்ளது.