Pagetamil
உலகம்

ஸ்பெயினில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கார்கள்

ஸ்பெயின் ஜராகோசா நகரில் பெய்த கனமழை காரணமாக அந்த நகர மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஜராகோசா நகரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக நகரின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் ஏராளமான கார்கள் அடித்து செல்லப்பட்டன. வெள்ளம் காரணமாக பலரும் காரினுள் சிக்கிக் கொண்டனர்.

இதுவரை எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காரினுள் சிக்கி கொண்ட மக்களை வெள்ள நீர் அடித்துச் செல்லும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.வெள்ளம் காரணமாக பேரழிவை ஜராகோசா சந்திப்பிருப்பதாக அந்நகர வாசிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ஸ்பெயினின் பேரிடர் மீட்புப் பணி குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் திட்டங்களை கசிய விட்ட சிஐஏ ஊழியர் கைது!

Pagetamil

இம்ரான் கானுக்கு 14 வருட சிறைத்தண்டனை

Pagetamil

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெய்லர் பிரிட்ஸின் நிதியுதவி

east tamil

உரிமையாளருக்காக 2 மாதங்கள் காத்திருக்கும் நாய்

Pagetamil

கைதிகள் துணையுடன் உறவு கொள்ள சிறைச்சாலைகளுக்குள் ‘காதல் அறைகள்’: இத்தாலி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏற்படும் மாற்றம்!

Pagetamil

Leave a Comment