வட்டகொடை, தலவாக்கலையில் இருந்து மதகும்புர வத்தை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பூண்டுலோயா, துனுகெதெனிய பிரதேசத்தில் இன்று (09) வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களை கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விபத்தின் போது பேருந்தில் 25 பேர் பயணித்தனர்.
வட்டகொட தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1