பாலியல் குற்றவாளியான நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதமராக, அவரது அன்புச் சிஷ்யை, திரைப்பட நடிகை ரஞ்சிதா அறிவிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சிதா பல தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். அவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே நித்தியானந்தாவின் வலையில் விழுந்தார். பின்னர், இருவரும் நித்தியானந்தாவின் ஆச்சிரமத்துக்குள்ளேயே உடல்ரீதியாக தொடர்பை பேணி வந்துள்ளனர்.
அவர்கள் இருவர் தொடர்பிலான அந்தரங்க வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தியாவில் பல்வேறு பாலியல் வழங்குகளில் தேடப்பட, குற்றவாளி நித்தியானந்தா நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டார். பல பலாத்கார வழக்குகள் குவிந்ததும், தான் ஆண்மையற்றவன் என அறிவித்தார். அவரது கூற்றை உறுதி செய்ய பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டபோது, இந்தியாவை விட்டு தப்பியோடினார்.
அவர் தனித்தீவை வாங்கி, அதற்கு கைலாசா என பெயரிட்டதாக முன்னர் அறிவித்தார்.
பின்னர் நாட்டின் தலைவராக தன்னை அறிவித்ததுடன், கைலாசாவுக்கு என தனி நாணயம், கடச்சீட்டு, மத்திய வங்கியென்பன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
தற்போது, கைலாச நாட்டின் பிரதமராக ரஞ்சிதா அறிவிக்கப்பட்டுள்ளார்.